கோவை மாநகர போலீசாருக்கு அட்டகாசமான ரோந்து வாகனங்கள்: விரைவில் வழங்கப்படுகிறது..!!

Author: Rajesh
6 February 2022, 10:32 am

கோவை: கோவை மாநகர போலீசாருக்கு ரோந்து பணிகளுக்காக அசத்தலான வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாநகர காவல் துறையில் உள்ள ரோந்து வாகனங்கள் மிகவும் பழுதடைந்துள்ளன. பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு முன்பு வாங்கப்பட்ட ‘டாட்டா சுமோ’ ரோந்து வாகனங்களையே போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் பல வாகனங்கள் பழுதடைந்து இருப்பதால் குறித்த நேரத்தில் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியாமலும், அசவுகரியமான பயணத்தாலும் போலீசார் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே அசத்தலான ரோந்து வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட உள்ளன.

இதற்காக கோவை மாநகர போலீசாருக்கு ரோந்து பணியை மேற்கொள்ள 17 ரோந்து வாகனங்கள் கோவை வந்துள்ளன. மகேந்திரா நிறுவனத்தின் ‘பொலெரோ நியோ’ மாடல் வாகனங்களை இனி போலீசார் ரோந்து பணிக்கு பயன்படுத்த உள்ளனர். சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் உள்ள இந்த ரோந்து வாகனங்கள் பார்ப்பதற்கு படு ‘ஸ்டைலாக’ உள்ளன. விரைவில் இந்த வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1204

    0

    0