தாயாரை சந்தித்து ஆசி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்…ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து நெகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 12:48 pm

பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருப்பூரைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அவரது வீட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் நண்பர்கள் திருப்புரைச் சேர்ந்த தன்னார்வலர்கள் அவரை நேரில் சந்தித்து தெரிவித்தனர் சி பி ராதாகிருஷ்ணன் அவரது தாயாரிடம் ஆசி பெற்று இனிப்பு ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார் .

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்திற்கு மீண்டும் ஒரு ஆளுநரை குடியரசு தலைவரும் பிரதமரும் கொடுத்துள்ளனர். இது தமிழினத்தின் மீதும், பாரம்பரியம் மீதும், கலாச்சாரம் மற்றும் தமிழ்மக்கள் மீதும் எத்தகைய அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளது.

பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மக்களின் உயர்வுக்கும் முன்னேற்றத்திறக்கும் என்னென்ன வழியில் ‌செய்லபட முடியுமோ அதை மனதில் வைத்து பணியாற்றுவேன் .

இது எனக்கு கிடைத்த பெருமையாக பார்க்கவில்லை. தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன், மோடிக்கும் குடியரசு தலைவருக்கும் தமிழ் மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியலின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இதை பார்க்கிறேன. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன்‌ என பேட்டியளித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 766

    0

    0