தமிழகம்

இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் அடித்துக் கொலை : திமுகவின் கூட்டணி கட்சிக்கே இந்த நிலைமையா?

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார்.

நேற்று இரவு தெருவில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பூக்கொல்லை பகுதியை சேர்ந்த நெய் கிருஷ்ணன் என்பவரை பார்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி முத்துகிருஷ்ணனுக்கு சொந்தமாக வளர்ப்பு நாய் குரைத்துள்ளது.

இதனால் இரண்டு பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆத்திரம் அடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் மாரி மாரி தாக்கி கொண்டதில் இருவருமே காயமடைந்துள்ளனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்துக்கிருஷ்ணன் தலையில் பலத்த காயம் அடைந்ததை தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

SDPI கட்சி முக்கிய தலைவர் வீட்டில் ரெய்டு.. ED அதிகாரிகள் சோதனையால் கோவையில் பரபர!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் ரோடு எக்ஸ்டென்ஷன் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜிக். இரும்பு கடை வைத்து தொழில்…

16 minutes ago

என் உடலை தானம் செய்கிறேன்..ஆனால் ‘இதயம்’..ஷிஹான் ஹுசைனி உருக்கமான வேண்டுகோள்.!

மருத்துவ ஆராய்ச்சிக்காக உடல் தானம் மதுரையைச் சேர்ந்த கராத்தே மற்றும் வில்வித்தை மாஸ்டரும்,நடிகருமான ஷிஹான் ஹூசைனி தனது உடலை மருத்துவ…

25 minutes ago

மனைவி சுயஇன்பம் செய்கிறார்.. கணவரின் மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு…

30 minutes ago

தாம்பரத்தில் கொலை.. செஞ்சியில் உடல் புதைப்பு.. Ex MP உதவியாளர் கொடூர கொலையின் பின்னணி என்ன?

முன்னாள் எம்பி உதவியாளரும், திமுக நிர்வாகியுமான குமாரை நிலத்தகராறில் கொலை செய்து செஞ்சியில் புதைத்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.…

1 hour ago

துரைமுருகன் இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டார்.. கூட்டணி கட்சித் தலைவர் குமுறல்!

கட்சிக் கொடிகளை அகற்றக்கோரி திமுகவினருக்கு துரைமுருகன் உத்தரவிட்டது, தங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டதாக சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.…

2 hours ago

திருநங்கை கொடூர கொலை… உடலை துண்டு துண்டாக வெட்டிய காதலன் : போலீஸ் குவிப்பால் பதற்றம்!

திருநங்கையை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதலனை போலீசார் கைது செய்து…

3 hours ago

This website uses cookies.