‘எங்கப்பன் தே****-யா வீட்டுக்கு போன நானும் போகனுமா’..? நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்கட்சி மீது முத்தரசன் பாய்ச்சல்!!

Author: Babu Lakshmanan
31 ஆகஸ்ட் 2023, 7:58 மணி
Quick Share

CIG அறிக்கைக்கு மோடி இதுவரை பதில் சொல்லாதது ஏன்..? என்று திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் நிதி அளிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- INDIA கூட்டணி நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. மூன்றாவது கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. 16 கட்சிகளாக இருந்து தற்போது 26 கட்சிகளாக மாறியுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால் நாட்டிற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்பதில் ஐயப்பாடு இல்லை. ஏற்கனவே நாடு ஜனநாயக பாதையை விட்டு நழுவி சென்றுள்ளது. சர்வாதிகார பாதையில் சென்று கொண்டுள்ளது.

INDIA கூட்டணி அரசியல் ரீதியாக பிஜேபியை எதிர்கொள்ளும். ஆனால் பிஜேபி அரசியல் ரீதியாக இந்த கூட்டணியை எதிராக கொள்ள தயாராக இல்லை. எதிர்கொள்ள முடியாது. மாறாக வேறு வழிகளில் வேறு முறைகளில் வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பு அவர்களிடம் உள்ள ஆயூதங்களான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற ஆயுதங்களை எதிர்கட்சிகளுக்கு எதிராக தவறான முறையில் நிச்சயமாக பயன்படுவதார்கள். தேர்தலையே ஜனநாயக முறையில் நடத்துவார்களா என்ற ஐயப்பாடு உள்ளது.

திட்டமிட்டபடி ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்பு தேர்தல் நடக்குமா..? முன்கூட்டியே தேர்தல் நடக்குமா..? என்ற ஐயப்பாடு உள்ளது. இந்தியாவில் மதக்கலவரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. மதக்கலவரங்கள் மூலம் ஆதாயம் பெற முடியும் என பிஜேபி நம்புகிறது. அது போன்ற காரியங்களை செய்து வருகின்றனர். மதக்கலவரங்கள் மூலம் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று மிக குறுகிய நோக்கதோடு, பிஜேபி அரசு செயல்பட்டு வருகிறது.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, நிறைவேற்ற முடியவில்லை. அதற்க்கான முயற்சி எடுக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்காக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை. மதக்கலவரம், ஜாதி கலவரம் என்ற முறையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. விலைவாசியை கட்டுப்படுத்தாது, மதக்கலவரங்கள், மொழியை திணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 12,13,14 தேதிகள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும்.

நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் மத்திய அரசு நினைத்தால் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியும். இது அரசியல் பிரச்சினை இல்லை. கட்சியின் பிரச்சினை இல்லை. இது பொது பிரச்சினை. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி, ஏன் இணைந்து குரல் கொடுக்க மறுக்கிறார்.

காலத்தையும், நேரத்தையும் வீண் அடித்து கொண்டு இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, திமுக, காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என லாவனி பாடி வருகிறார். இதனால் என்ன பயன். ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தமால் வெற்று நாடகம் நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

CIG அறிக்கை என்பது சாதாரண அறிக்கை இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் இதுவும் ஒரு அமைப்பு. இந்த அமைப்பு யாருக்கும் கட்டுபட்டது அல்ல, சுதந்திரமான அமைப்பு. ஊழல் அறிக்கை வெளியே வந்த பிறகு, இந்த துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இருக்குமா என்பது என்னுடைய ஐயப்பாடு. மத்திய அரசின் 7 துறைகளில் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று உள்ளது. CIG அறிக்கைக்கு மோடி இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. சாலை போக்குவரத்து துறையில் ஏழரை லட்சம் கோடி மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது, என தெரிவித்தார்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 324

    0

    0