ஜி20 மாநாடு எல்லாம் பெருமைதான்.. ஆனா, அந்த தாமரை சின்னத்தை மட்டும் நீக்குங்க ; மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
8 December 2022, 8:56 am

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு கூட்டத்திற்கு பங்கேற்க வந்திருந்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது :- தமிழக ஆளுர் ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் 29ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்த்தில் ஈடுபட இருகின்றோம். ஜி 20 மாநாட்டிற்கான லட்சணையில் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை சின்னம் இடம்பெற்றிருப்பதை அகற்றிட வேண்டும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா காலத்தில் முடங்கிய சிறு குறு தொழில்களை மீட்பது உள்ளிட்டவற்றை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும். கூட்ட தொடரை ஜனநாயக முறைப்படி நடத்திடவேண்டும்.

இந்திய தலைமை தேர்தல் ஆணைய தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்கள் மிகுந்த ஆலோசிக்கப்பட வேண்டியதாக இருக்கின்றது. தேர்தல் ஆணையம் என்பது நடுநிலைமையோடு செயல்பட வேண்டியது, தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு ஏதுவாக தேர்தல் தேதியை அறிவிப்பது, செயல்படுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்பு பணத்தை மீட்க போவதாக அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கை மூலம் கருப்பு பணம் மீட்கப்படவே இல்லை என ரிசர்வ் வங்கியே தெரிவித்துள்ளது, இவற்றையெல்லாம் நாடாளுமன்ற கூட்ட தொடரில் விவாதிக்க எதிர்கட்சி உறுப்பினர்கள் அனுமதிக்க வேண்டும்.

தமிழ் மொழியை பற்றி புகழ்ந்து பேசும் பிரதமர் மோடியின் பேச்சை வரவேற்கிறோம். ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு 22 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி விட்டு, சமஸ்கிருத மொழிக்கு 222 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது, உள்ளம் ஒன்றும், உதடு ஒன்றும் பேசுவது போன்று இருக்கிறது. ஆகவே, தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதியினை ஒதுக்கிட வேண்டும்.

பிரதமர், குடியரசுத்தலைவர் ஆகிய உயர் பொறுப்புகளில் உள்ளவர்களின் பாதுகாப்பு என்பது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தொடர்பானது. இந்த நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பிரதமரின் பாதுகாப்பு குறித்து ஆளுநரிடம் முறையிட்டிருப்பது, அதன் மீது ஆளுநர் தலைமை செயலாளருக்கு விளக்கம் கேட்டிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதகள் சட்ட பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குப்பையில் போட்டிருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும்.

தமிழக அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை சிலவற்றை நிறைவேற்றியிருக்கிறார். மீதமுள்ள கோரிக்கைகளை நிதி ஆதாரத்தை பொறுத்து நிறைவேற்றுவோம் என முதலமைச்சரே தெரிவித்திருக்கிறார், எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 552

    0

    0