ஆ.ராசா கொளுத்திவிட்ட தீ.. முட்டிமோதும் திமுக – சிபிஐஎம்.. என்ன நடக்கிறது?

Author: Hariharasudhan
7 January 2025, 6:49 pm

ஆ.ராசா, கம்யூனிஸ்ட் கட்சியினர் சுயநலவாதிகள் எனப் பேசியது தவறானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னை: சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “ஆ.ராசா கூறியது தவறானது. அடிப்படை இல்லாதது. அதனை அவர் சரி செய்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் தலைவர்கள் நீர்த்துப் போகவில்லை” எனத் தெரிவித்தார்.

காரணம், “தத்துவத்தின் மீது தலைவர்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை குறையக் குறைய தத்துவம் தோற்றுவிடும். தத்துவத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது. ஆனால் கம்யூனிசத் தத்துவத்தை எடுத்து வந்த தலைவர்கள் நீர்த்து போன காரணத்தினால், சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தினால் கொள்கை நீர்த்துப் போய் விட்டது, கொள்கை தோற்றுவிட்டது” எனத் தெரிவித்து இருந்தார்.

முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு, விழுப்புரத்தில் கடந்த ஜனவரி 2 முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பேசிய அப்போதைய சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக போலீசார் வழக்குப் பதிவு செய்கின்றனர்.

DMK Vs CPIM in Tamil Nadu Politics

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் மாநாட்டுப் பேரணிக்கு அனுமதி மறுத்து, கடைசி நேரத்தில் அனுமதி தந்தீர்கள். பின்னர், கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேரணிக்கு அனுமதியில்லை எனத் தெரிவிப்பது ஏன்?

இதையும் படிங்க: முதல் விக்கெட்… ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் யார் போட்டி?

எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனைத்துக் கட்சிகளும் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல் தான் சிறந்தது” என கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு, முரசொலி பத்திரிகை எதிர்மறை கருத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 56

    0

    0

    Leave a Reply