படாத பாடுபட்டு பாமகவை பாஜக கூட்டணியில் சேர்த்துள்ளதாகவும், தோற்றுவிடுவோம் என தெரிந்தும் ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடும் தமிழிசைக்கு அனுதாபங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசனுக்கு பரப்புரை மேற்கொள்ளும் பணியின் ஒரு பகுதியாக நடைபெறும் சிறப்பு பேரவை கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்தவர், “அமைச்சர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தை ஆளுநர் நிராகரித்திருப்பது அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. முதலமைச்சர் முன்மொழியும் நபர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என பார்ப்பது ஆளுநரின் வேலை அல்ல. ஆளுநர் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார். சட்ட வரம்பு மீறி ஆளுநர் செயல்படுகிறார்.
எதிரணியில் இருப்பவர்கள் கூட்டணி குழப்பத்தில் உள்ளனர். இதுவே 40 தொகுதியிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளதை காண்பிக்கிறது. என்ன தான் ஆளுநரை, விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் வெற்றி பெற முடியாது. ஹரியானா உட்பட பல மாநிலங்களில் பாஜகவிடமிருந்து கூட்டணி கட்சிகள் விலகி கொண்டிருக்கின்றன.
பிரச்சாரத்திற்குரிய கால அவகாசம் கூட தராமல் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உண்மையில் மோடியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தான் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. மோடி ஏற்கனவே 3 மாதமாக தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டார். எனவே மோடி தான் தேர்தலை அறிவித்துள்ளார் போல தெரிகிறது.
பாஜக தோற்றுவிடும் என தெரிந்திருந்தும் ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இப்போது தேர்தலில் போட்டியிடவுள்ளார் தமிழிசை. பாவம் அவர்களுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. அவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம். படாதபாடு பட்டு பாமகவை கூட்டணியில் சேர்த்துள்ளது பாஜக. பாமகவை கூட்டணியில் சேர்த்து கொண்டு வாரிசு அரசியல் பற்றி மோடி பேசலாமா? கூட்டணிக்காக உங்களுடைய கொள்கையை நீங்களே மீறி விட்டீர்களே,” எனக் கூறினார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
This website uses cookies.