ஆளுநர்களை வைத்து போட்டி சர்க்கார் நடத்தும் பாஜக… ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை : கே. பாலகிருஷ்ணன்
Author: Babu Lakshmanan14 February 2024, 2:24 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருகிறபாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்கும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன்
தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்டகரையம்பட்டு பகுதியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்கும். சட்டசபையில் ஆளுநர் அவரது உரையை படிக்காமல் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் சட்டத்தை அவமதித்துள்ளார்.
ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை, நீடிக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆளுநர்களை பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சர்க்கார் நடத்தி வருகிறது. 2024 தேர்தலில் அதற்கு மக்கள் ஒரு முடிவு கட்டுவார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை எதிர்த்து இயற்றப்படவுள்ள தீர்மானத்திற்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் தொகுதி எண்ணிக்கை குறைந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி இயற்றப்படவுள்ள தீர்மானத்திற்கும் ஆதரவு அளிக்கிறோம். நாட்டை வடக்கு தெற்காக பிரிவினை செய்யும் போக்கை மோடி கடைபிடித்து வருகிறார்.
ஜாமீன் கிடைக்காமல் நீண்ட காலத்திற்கு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளது நல்ல நடவடிக்கை. டெல்லியில் போராடும் விவசாயிகளை தடுக்கும் மோடி அரசை
கண்டிக்கிறேன், எனக் கூறினார்.