தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவம் .. தரைமட்டமான அறைகள்… 5 பேர் உடல் சிதறி பலியான சோகம்..!!

Author: Babu Lakshmanan
10 November 2022, 4:19 pm

மதுரை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமங்கலம் அருகே அழகு சிலை பகுதியில் வாணவேடிக்கை தயாரிக்கு பட்டாசு ஆலை இன்று இயங்கி வந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 அறைகள் முழுவதும் தரைமட்டமானது.

இந்த விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 5 பேர் அங்கங்கே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மதுரை மற்றும் திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!