சென்னையை மீண்டும் உலுக்கிய படுகொலை:அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீசார்: தட்டித் தூக்கியது எப்படி….!!

Author: Sudha
14 August 2024, 1:21 pm

வடசென்னை திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி லோகேஷ்(32). இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.

இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த லோகேஷை பிரகாஷ் என்பவர் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், தலை கை கால்கள் என படுகாயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டத்தை சேர்ந்த சொட்டை பிரகாஷ், மதன், திருவொற்றியூர் சாத்து மாநகரை சேர்ந்த சாமியார் கார்த்தி, காசிமேடு அண்ணாநகரை சேர்ந்த தண்டபாணி, சுரேந்தர், பிரகாஷ்ராஜ் ஆகியோரை பழவேற்காட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதில், சொட்டை பிரகாஷ், திருவெற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்திலிருந்து தப்பிக்க முயன்றபோது மேலிருந்து கீழே விழுந்ததில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!
  • Close menu