முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி.. புயலை கிளப்பிய ஆசிரியர்கள் : ஒண்ணு கூட நிறைவேத்தல.. வெளியான அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2023, 4:52 pm
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி.. புயலை கிளப்பிய ஆசிரியர்கள் : ஒண்ணு கூட நிறைவேத்தல.. வெளியான அறிவிப்பு!
வரும் 29ஆம் தேதி 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று திரண்டு முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் – பொதுச் செயலாளர் மயில் பேட்டி
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஆசிரியர் இல்ல வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் மயில், மாநில பொருளாளர் மத்தேயு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச் செயலாளர் மயில், திமுக தேர்தல் அறிக்கையில் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்றும், தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவோம் என்றும், கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்குவோம் என்றும், கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது.
ஆனால் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையிலும் மேற்கண்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முன்வரவில்லை
இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக் உள்ளிட்ட கூட்டமைப்புகள் போராட்டங்கள் அறிவித்ததை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் எவ்வித பயன்களையும் அளிக்கவில்லை.
இதனால் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திட வேண்டும்.
மேலும் ஆசிரியர்கள் பதவி உயர்வில் செல்ல தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய தேவை இல்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து, ஒரு சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் சார்பில் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணியாக சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலியிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்துவதற்கான மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.