பண்ணவில்லை விமர்சனம், நாட்டு மக்களுக்கு எப்படியாவது வேண்டும் ஒரு விமோசனம் : விஜய் அரசியல் கட்சி குறித்து டி.ஆர். கருத்து!
Author: Udayachandran RadhaKrishnan3 February 2024, 9:59 pm
பண்ணவில்லை விமர்சனம், நாட்டு மக்களுக்கு எப்படியாவது வேண்டும் ஒரு விமோசனம் : விஜய் அரசியல் கட்சி குறித்து டி.ஆர். கருத்து!
தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் விஜய், அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு பல வருடங்களாக இருந்தது. தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிளை செய்து வந்த விஜய், கடந்த 2 வருடமாக அரசியல் கட்சி துவங்குவதில் தீவிரம் காட்டி வந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜயின் அரசியல் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்தார். “விஜய் மக்கள் இயக்கம்” என்பதை அரசியல் கட்சியாக பதிவு செய்து “தமிழக வெற்றி கழகம்” என அரசியல் கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இதை விஜய் ரசிகர்கள் வரவேற்று இனிப்புகளை வழங்கி பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகன்றனர். சினிமாவில் உள்ள பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் அவர்கள் இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது விஜயின் அரசியல் வருகையை தானும் வரவேற்பதாக கூறியுள்ளார். அரசியல் என்பது ஒரு பொது வழி, இதில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. இந்த சூழ்நிலையில் நான் விஜய் அவர்களுடைய அரசியல் நுழைவு குறித்து “பண்ண விரும்பவில்லை விமர்சனம், நாட்டு மக்களுக்கு எப்படியாவது வேண்டும் ஒரு விமோசனம்” என்று கூறி அவர் பாணியில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் அவர்களுடைய புலி திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் விஜயை புகழ்ந்து ராஜேந்தர் பேசிய வசனங்கள் இன்றளவும் பிரபலம். அவருடைய மகன் சிம்புவின் 48வது படமும் வெகு ஜோராக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.