ஆளுநரின் ஆய்வுக்கூட்டத்தில் தமிழக அரசின் செய்லபாடுகள் குறித்து விமர்சனம் : ஆர்எஸ் பாரதி சொன்ன ஒரே ஒரு வார்த்தை!!
Author: Udayachandran RadhaKrishnan19 December 2023, 8:57 pm
ஆளுநரின் ஆய்வுக்கூட்டத்தில் தமிழக அரசின் செய்லபாடுகள் குறித்து விமர்சனம் : ஆர்எஸ் பாரதி சொன்ன ஒரே ஒரு வார்த்தை!!
திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் கருணாநிதி புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் திமுகவின் அமைப்புச் செயலாளரும் , முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டிருந்தார். கண்காட்சியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேராசிரியரின் பிறந்தநாளான இன்று கலைஞரின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது பெருமைக்குரியது எனவும் , பேராசிரியர் அன்பழகன் மற்றும் திமுகவின் தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு செய்த சாதனைகளை திமுகவினர் மட்டுமல்லாது தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருப்பதாகவும் , கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட ஓமந்தூரார் சட்டமன்றம் அதிமுகவின் குறுகிய மனப்பான்மையினாலும் , பொறாமை எண்ணத்தாலும் மருத்துவமனையாக மாற்றப்பட்டதை மக்கள் உணர்வார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக முதல்வர் பிரதமர் மோடி சந்திப்பு குறித்த கேள்விக்கு பேரிடர் குறித்த முக்கிய கோரிக்கைகளை தமிழக முதல்வர் முன்வைப்பார் எனவும் அவர்களும் நல்ல எண்ணத்துடன் நடந்து கொள்வார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.
பேரிடர் குறித்து ஆளுநர் ஆய்வுக் கூட்டம் குறித்து விமர்சிக்க விரும்பவில்லை எனவும் பேரிடர் காலம் என்பதால் நல்லதை யார் செய்தாலும் அதனை திமுக வரவேற்கும் என பேட்டி அளித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.