கோவையில் வாழை தோட்டத்திற்குள் நுழைந்த இராட்சத முதலை… 3 மணிநேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!!

Author: Babu Lakshmanan
12 March 2024, 4:27 pm

கோவை – மேட்டுப்பாளையம் அருகே மொக்கை மேடு பகுதியில் வாழை தோட்டத்தில் நுழைந்த முதலையை வனத்துறையினர் 3 மணிநேரம் போராடி பிடித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மொக்கை மேடு பகுதியில் தமிழ் செல்வன் என்பவரது விவசாய தோட்டத்தில் முதலை ஒன்று வந்தது. இது குறித்து தகவலின் பேரில் சிறுமுகை வனத்துறையினர், அங்கு வந்து முதலையை சுருக்கு கயிறு கட்டி பிடிக்க முயன்றனர்.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் போராடி அந்த முதலையை இலாவகமாக வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட முதலையை கயிறுகளால் கட்டி தோழில் சுமந்து வந்து வாகனத்தில் ஏற்றினர்.

மீட்கப்பட்ட முதலையை பவானி சாகர் அணை பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் வாகனத்தில் எடுத்து சென்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu