ஒரே மையத்தில் அதிகளவு வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால் கூட்ட நெரிசல் : நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல்..!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2022, 5:24 pm

கோவை: கோவையில் ஒரே வாக்கு மையத்தில் அதிகளவில் பொதுமக்கள் சேர்க்கப்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது கோவை வடவள்ளி பகுதிக்கு உட்பட்ட 38வது வார்டில் உள்ள வாக்கு மையங்களில் அதிகளவில் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் வடவள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 418 என்ற வாக்கு மையத்தில் அதிகளவில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியதால் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர்.

ஒரே மையத்தில் பல வாக்காளர்களைச் சேர்த்ததால் இப்படி அவதிக்குள்ளானதாக மக்கள் தெரிவித்தனர். அதே வாக்குப்பதிவு மையத்தில் மற்ற நான்கு மையங்களில் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!