காத்து வாங்கிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்.. தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!!
Author: Udayachandran RadhaKrishnan13 January 2024, 4:47 pm
காத்து வாங்கிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்.. தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!!
நாளை மறுதினம் பொங்கல் பண்டிகை வர உள்ளதால், தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான தேவையான வசதிகள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த பேருந்துநிலையத்தில் இன்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்க சிஇஓ நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையரக இணை இயக்குநர் பார்த்தீபன் பேருந்து நிலைய சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் என்ன? பேருந்துகள் முறையாக இயக்கப்படுகிறதா? வசதிகள் உள்ளதா உள்ளிட் பணிகளை புதியதாக நியமனம் செய்யப்பட்ட சிஇஓ மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.