விடுமுறை நாட்களில் அலைமோதிய கூட்டம்… திற்பரப்பு அருவியில் ஆர்பரித்த வெள்ளம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2024, 5:21 pm
thirparappu
Quick Share

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் இன்று வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே சுற்றுலா தலங்களை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்த வண்ணம் உள்ளதால் இப்பகுதி வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு தண்ணீரின் அளவு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது அருவியிலிருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் திருப்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் குழந்தைகளுடன் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.

Views: - 234

0

0