பழனி கோவிலில் அலைமோதிய கூட்டம்.. 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2024, 4:53 pm

பழனி கோவிலில் படையெடுத்த கூட்டம்.. 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் தைப்பூசத் திருவிழா கடந்த 19ம தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் கடந்த 25ஆம் தேதி ஏழாம் நாளான அன்று பூச நட்சத்திரத்தில் தைப்பூச திருவிழாவில் அன்று மாலை தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று 10ம் நாள் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும் முருகன் பக்தி பாடலை பாடியும் , கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இதனால் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவிலுக்கு செல்லவும் ,படிப்பாதை வழியாக கீழே இறங கவும் ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த இடத்தில் போலீசார் போதிய அளவில் இல்லாததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். மின் இழுவை ரயில் ,ரோப் கார் நிலையம், இலவச தரிசன வழி ,சிறப்பு கட்டண தரிசன வழி என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளதால் சுமார் ஆறு மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்று மாலை தெப்பக்குளத்தில் தெப்ப தேரோட்டம் நடைபெறும் அதனை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 325

    0

    0