பெற்ற மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூரத் தந்தை : நீதி வேண்டி தாய் கண்ணீர் மல்க புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2023, 8:29 pm

பெற்ற மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூரத் தந்தை : நீதி வேண்டி தாய் கண்ணீர் மல்க புகார்!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்டது அழகம்பட்டி இப்பகுதியில் வசித்து வருபவர் செல்வ முருகன் இவர் இதே பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வருகிறார் இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களுக்கு 17 வயது மற்றும் 15 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவியின் இடையே பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

கிருஷ்ணவேணி இப்பகுதியில் கூலி வேலைக்கு சென்று வருவதாகவும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தனது மகள்களை வளர்ப்பதாகவும் தனது துணைக்கு தனது தந்தையுடன் வாழ்ந்து வருவதாகவும் இந்நிலையில் தனது பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகள் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக இருந்ததாகவும் இந்நிலையில் மகளிடம் ஏன் இப்படி இருக்கிறாய் என்று கிருஷ்ணவேணி கேட்ட பொழுது வீட்டில் யாரும் இல்லாத போது தனது தந்தை செல்வ முருகன் வீட்டிற்கு வந்ததாகவும் தன்னிடம் அத்துமீறி தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் ஒரு கட்டத்தில் கீழே தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் இதை வெளியில் கூறினால் கொலை செய்த விடுவேன் என்று மிரட்டியதாகவும் அதனால் தன்னிடம் சொல்லவில்லை என்றும் கூறியதாக கிருஷ்ணவேணி கூறினார்.

மேலும் ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.

எனது மகளுக்கும் எனக்கும் பாதுகாப்பு இல்லை எனக்கும் எனது மகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் தகாத முறையில் நடந்து கொண்ட தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனுவை வழங்கினார்

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!