தனியார் கல்லூரியில் ஜூனியருக்கு நடந்த கொடுமை.. சீனியர் மாணவர்கள் இரண்டு பேருடன் சிக்கிய டீக்கடை ஊழியர்!!
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்து தாக்குதல் நடத்திய சீனியர் மாணவர்கள் இருவர் உட்பட மூவர் மீது போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சூலூர் குமரன் கோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆர்.வி.எஸ் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்தக் கல்லூரியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் இரண்டாம் ஆண்டு பொறியியல் (மெக்கட்ரானிக்ஸ்) கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனுடன் அதே கல்லூரியில் அவரது பாடப்பிரிவல் படிக்கும் 12 மாணவர்களும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் சக மாணவர்கள் தங்கி இருந்த போது நேற்று முன்தினம் மாலை அதே கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் குரல் இனியன் மற்றும் அரவிந்த், நான்காம் ஆண்டு படிக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த முத்து குமார் மற்றும் கரூரை சேர்ந்த கோகுல் ஆகியோர் வந்துள்ளனர்.
அப்போது நால்வரும் இணைந்து ஜூனியர் மாணவர்களிடம், கல்லூரிக்குள் காப்பு கயிறு கட்டக்கூடாது, முழுக்கை சட்டை அணிந்து டக்கின் செய்திருக்க வேண்டும், சீனியர் முன்னாள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது, சீனியர் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் எனக் கூறி எச்சரித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் பிடிக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட மாணவன் விடுதியில் இருந்து வெளியே செனறுவிட, நேற்று மாலை பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவருடன் படிக்கும் 12 மாணவர்களையும் கல்லூரி முடிந்த பின்பு சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வெங்கடேஷ் என்ற மாணவனின் அறைக்கு வருமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் 12 மாணவர்களும் சென்ற நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் தவிர மற்ற 12 மாணவர்களையும் கோகுல், முத்துக்குமார் ஆகிய இருவரும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவனை இருசக்கர வாகனத்தில் ஏற்றுக் கொண்ட முத்துக்குமார் மற்றும் கோகுல் முத்துக்குமாரின் நண்பரான சூலூர் டீக்கடையில் வேலை செய்து வரும் தனபால் என்பவரின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மூவரும் இணைந்து பாதிக்கப்பட்ட மாணவனை தகாத வார்த்தையால் திட்டியதோடு கைகளால் தாக்கியுள்ளனர்.மேலும் பாதிக்கப்பட்ட மாணவனின் கைக்கடிகாரம் மற்றும் செல்போனை பிடுங்கி உடைத்த மூவரும் “சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்” என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் நெற்றி பகுதியில் காயமடைந்த பாதிக்கப்பட்ட மாணவன் இது குறித்து விடுதி காப்பாளர் இடம் தகவல் கூறிவிட்டு சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் 294(b),323,506(i),4 of tamilnadu prohibition ragging act ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் கோகுல் மற்றும் டீக்கடை ஊழியர் தனபால் ஆகிய மூவரையும் பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீசார் சக மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தேர்வு முடிந்து கல்லூரியில் இருந்து வெளிவந்த இரண்டு மாணவர்களையும், வெளியே காத்திருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் டீக்கடை ஊழியர் தனபாலும் கைது செய்யப்பட்டார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.