ஜல்லியே இல்லாமல் சாலை போடும் கொடுமை.. அமைச்சர் தொகுதியில் அவலம் : கேள்வி கேட்டால் மிரட்டல்.. ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2024, 6:59 pm

ஜல்லியே இல்லாமல் சாலை போடும் கொடுமை.. அமைச்சர் தொகுதியில் அவலம் : கேள்வி கேட்டால் மிரட்டல்.. ஷாக் வீடியோ!

புதுச்சேரி மண்ணாடிபட்டு கொம்யூன், குமாரபாளையம் கிராமத்தில் அரசு பொதுப் பணித்துறையின் மூலம் தார்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இந்த பணியை மேற்பார்வையிட அதிகாரிகள் சம்பவ இடத்தில் இல்லாததால் தார் சாலை உயரம் அளவு குறைத்து சிப்ஸ் மிக்சிங்கை மட்டுமே போட்டு தரமற்ற சாலையினை ஒப்பந்ததாரர் ஓட்டு வருவதாகவும் இதற்கு அதிகாரிகள் துணையாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் இதனை சுட்டி காட்டி கேள்வி கேட்ட உள்ளூர் இளைஞர்களை பார்த்து யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் அதிகாரிகள் வரமாட்டார்கள் என கூறியது மட்டுமின்றி எந்தவித அச்சமும் இன்றி வேண்டியதை கொடுத்துவிட்டோம் நாங்கள் போடுவது தான் சாலை இல்லையேல் வேலையை நிறுத்திவிடுவென் என்று மிரட்டல் விடுவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஏற்கனவே இருந்த சாலையின் மீது சினிமாக்களில் இடம்பெறும் காட்சியைப் போல் பெயரளவில் சாலை போட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது மேலும் சாலை அமைக்கும் பகுதியானது உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!