தெருநாய்க்கு நடந்த கொடுமை… போதை ஆசாமியின் வெறிச்செயல் : திருப்பூரில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2024, 1:54 pm

தெருநாய்க்கு நடந்த கொடுமை… போதை ஆசாமியின் வெறிச்செயல் : திருப்பூரில் பயங்கரம்!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, வேலாயுதம்பாளையம பகுதியை சேர்ந்தவர் தஸ்தகீர். சரி வர வேலைக்கு செல்லாமல் கஞ்சா போதையில் அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மது மற்றும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் தஸ்தகீர், அப்பகுதியில் உள்ள தெரு நாயை பிடித்து துன்புறுத்தியதால் நாய் தஸ்தகீரை கடித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தஸ்தகீர் நாயின், பின்னங்கால்களை கயிற்றால் கட்டி, கட்டையால் கடுமையாக தாக்கியதில் நாய் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை பார்த்த அவ்வழியே சென்ற நபர் ஒருவர் இதனை விடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, காளீஸ்வரி என்பவர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கஞ்சா போதையில் நாயை கொன்றதாக தஸ்தகீரை அவிநாசி போலீசார் கைது செய்தனர்.

  • Mookuthi Amman 2 latest shooting update அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!