கடலூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சக் குப்பம் பகுதியை அடுத்துள்ள தாழங்குடா மீனவ கிராமத்தில் மதியழகன் மற்றும் மதிவாணன் ஆகியோருக்கு இடையே ஊராட்சி தேர்தல் போட்டியிடுவதில் பிரச்சனை நிலவி வந்தது.
கடந்த 2020ம் ஆண்டு மதிவாணன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கில் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அண்மையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சுவாமி கும்பிட்ட மதிவாணன், தனது வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் பைக்கில் வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மதியழகனை வழிமறித்தனர்.
உயிர் பயத்தில் அங்கிருந்து தப்பியோடிய மதியழகனை, துரத்திச் சென்ற அந்த கும்பல், அவரை விடாமல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டினர். இதில், மதியழகன் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதோடு, தலையில் அரிவாளை சொருகி வைத்து விட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியது.
பட்டப்பகலில் காலை நேரத்தில் நடுரோட்டில் நடந்த இந்தக் கொலை சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து கடலூரில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.