கடலூர் அருகே, திமுக கவுன்சிலர் மீது திமுக நகர்மன்ற துணைத் தலைவர் காரித்துப்பிய சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
கடலூர்: சட்டசபையில் சட்டை கிழியத் தான் செய்யும், சண்டை வரத்தான் செய்யும் என்றும், அங்குள்ள சேர், பெஞ்ச் ஆகியவை உடைக்கப்படும் என்றும் நாம் பல சினிமாக்களிலும், ஏன், சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம்.
ஆனால், இங்கு உறுப்பினர் மீது காரித்துப்பிய சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், முக்கியமாக, ஆளும் திமுக நகர்மன்ற துணைத் தலைவரே, திமுக கவுன்சிலர் மீது காரித் துப்பியதால் இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது எதற்காக நடந்தது? எங்கு நடந்தது என்பதை பார்க்கலாம்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில், இன்று வழக்கம்போல் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக நகர்மன்றத் தலைவர் வெண்ணிலா, துணைத் தலைவர் பரமகுரு, கவுன்சிலர்கள் அதிகாரிகள் என பலரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டமும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 13வது வார்டு திமுக கவுன்சிலர் தனபால், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும், நகராட்சியில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார்.
திமுக கவுன்சிலரே முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டியதால், அதே திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற துணைத் தலைவரும், திமுக நகரச் செயலாளருமான பரமகுரு, கவுன்சிலர் தனபால் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது ஒருகட்டத்தில் ஒருமை பேச்சு வரை சென்றதால், உறுப்பினர்க முக சுழிப்பு அடைந்தனர்.
இதையும் படிங்க: மனைவி, ரிசப்ஷனிஸ்ட் உடன் சேர்ந்து ரூ.17 லட்சம் அபேஸ்.. பாஜக பிரமுகரின் மோசடி வெளியானது எப்படி?
மேலும், ஒருபடி மேலே சென்ற திமுக நகர்மன்ற துணைத் தலைவர் பரமகுரு, திமுக கவுன்சிலர் தனபால் மீது காரித் துப்பியதால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத சக கவுன்சிலர்கள், இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சமாதானம் செய்ய முறபட்டனர். இறுதியில், இருவரையும் சமாதானப்படுத்தினர். இவ்வாறு பெண் நகர்மன்றத் தலைவர் உள்பட பல பெண் உறுப்பினர்கள் இருந்த அரசு மேடையில், ஆளும் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும், அநாகரீகப் பேச்சுகள் மட்டுமின்றி, காரித் துப்பிய நிகழ்வு அரசியல் மேடையில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.