‘இது என்னோட இடம்’… காரை நிறுத்தி சாலை போடுவதை தடுத்து நிறுத்திய திமுக கவுன்சிலர் அடாவடி..!!

Author: Babu Lakshmanan
1 September 2023, 5:00 pm

கடலூர் அருகே வீதியின் குறுக்கே காரை நிறுத்தி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்திய திமுக ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு நிலவியது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவினங்குடி ஊராட்சியில் 15 ஆவது நிதி குழு மானிய நீதியில் சாலை அமைக்கும் பணி முறையாக அளவீடு செய்து நடைபெற்றது.

இந்த நிலையில் அங்கு வந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் பாக்கியராஜ் என்பவர் சாலை போடும் இடம் தனக்கு சொந்தமான இடம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பொருட்படுத்தாத ஊராட்சி நிர்வாகம், தொடர்ந்து சாலை போடும் பணியில் ஈடுபட்டது. பின்னர் ஒன்றிய கவுன்சிலர் பாக்கியராஜ் தனது காரை சாலை போட விடாமல் தடுக்கும் விதமாக வீதியின் நடுவில் நிறுத்தியுள்ளார். இதனைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் திமுக ஒன்றிய கவுன்சிலர் இதுபோல் நடந்து கொள்வதாகவும், அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!