சினிமாவில் அந்த மாதிரியான கலாச்சாரங்கள்.? திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!

Author: Rajesh
30 May 2022, 11:03 am

இன்றைய சூழ்நிலையில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் ஆபாசம், வன்முறை, கெட்டவார்த்தைகள், லெஸ்பியன், பாலியல் துன்புறுத்தல் போன்ற காட்சிகள் அதிக அளவில் இடம் பெறுகின்றது.

அதுவும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் ஒழுங்குமுறையே கிடையாது. ஓடிடியில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் லெஸ்பியன் கலாசாரம் தலை தூக்கியுள்ளது. முன்பு சினிமாவில் மறைவாக காட்டப்பட்ட காட்சிகள் தற்போது வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டு வருகிறது. முன்பு ஹீரோ, ஹீரோயின்களுக்கு முத்தம் கொடுக்க வரும் போது இடையில் ஒரு பூங்கொத்து வைத்து விடுவார்கள். அவர்கள் முத்தம் கொடுத்துக் கொண்டார்கள் என்பதற்கு அடையாளமாகும்.

ஆனால் தற்போது லிப் கிஸ் என்கின்ற பெயரில் முத்தமிடுவது ஜூம் போட்டு காண்பிக்கின்றார்கள். அதுமட்டுமில்லாமல் பல படங்களில் இரட்டை அர்த்த வசனம், கெட்ட வார்த்தை, போதாத குறைக்கு லெஸ்பியன் உறவு என கலாச்சாரத்தை கெடுக்கும் காட்சிகள் அதிக அளவில் உள்ளது. சமீபத்தில் இயக்குனர் ராம்கோபால் வர்மா காட்ரா என்ற ஹிந்தி படத்தை தயாரித்து இயக்கினார்.

இந்த படத்தில் தமிழில் காதல் காதல் தான் என்ற பெயரில் வெளியானது. இது ஆண்களை வெறுக்கும் பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இதுதான் இந்தியாவின் முதல் லெஸ்பியன் திரைப்படம். சினிமாவில் சொல்வதற்கும், சிந்திப்பதற்கும் ஓராயிரம் கதை இருக்கும்பொழுது இதுபோன்ற ஆபாச படம் தேவைதான என சினிமா பிரியர்கள் பலரும் தங்களது ஆதங்கமாக தெரிவித்து வருகின்றனர்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!