கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடு மீறல்…ஒரே நாளில் ரூ.5.53 லட்சம் அபராதம் வசூல்: மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

Author: Rajesh
24 January 2022, 6:12 pm

கோவை: கோவையில் நேற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து 5 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவையில் நேற்று ஞாயிறு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டிருந்தது. வெவ்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.5 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ‘நேற்று முழு உரடங்கின் போது கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்ப்டது. அபராத தொகை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது’.

அதன்படி, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் ரூ.5 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 5771

    0

    0