நடுரோட்டில் கேக் வெட்டி அட்டகாசம்… தட்டி கேட்டவர்கள் மீது ஸ்ப்ரே அடித்த பள்ளி மாணவன்.. ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2023, 7:10 pm

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆட்டுக்குளம் விளக்கில் மேலூர் – சிவகங்கை சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் கேக் வைத்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவில் சாலையை மறித்து இடையூறு செய்யலாமா என்று கேட்கும் முதியவரை மாணவர் ஒருவர் முகத்தில் ஸ்பிரே அடித்து அவமரியாதை செய்கிறார்.

வீடியோ வைரலானதை தொடர்ந்து மேலூர் டிஎஸ்பி ஆர்லிஸ் ரெபோனி அந்த மாணவர்களை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தார்.

அதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் ஆட்டுக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் கல்லூரி மாணவர் சிவணி (19) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் மீது சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், முதியவர்களை அவமரியாதை செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிரதான சாலையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 406

    0

    0