முடியை வெட்டிட்டு வா… கடிந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள் : மரத்தில் தொங்கிய மாணவன்.. அதிர்ச்சி சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan26 September 2023, 11:24 am
முடியை வெட்டிட்டு வா… கடிந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள் : மனமுடைந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு!!!
புதுக்கோட்டை விஜயபுரத்தை சேர்ந்தர் மாதேஸ்வரன் (வயது 17). இவர் மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ-2 வகுப்பு வேளாண்மை பாடப்பிரிவு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு பள்ளி அருகே உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தூங்கினார். இதுகுறித்து அப்பகுதியினர் கணேஷ் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். இதற்கிடையே பள்ளி சென்ற மாணவன் இரவாகியும் வீடு திரும்பாததால் பள்ளிக்கு அவரது பெற்றோர், உறவினர்கள் தேடி வந்தனர்.
அப்போது அங்கு மாதேஸ்வரன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாணவரின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். மாணவனின் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவனின் சாவுக்கு பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம் எனக்கூறி பள்ளி ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவனின் உடல் நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்வதற்கான காரணம் என்பது குறித்து விசாரணை நடத்திய நிலையில் பள்ளி ஆசிரியர்கள் முடி திருத்தம் செய்து வர சொன்னதால் மாணவன் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.