அதிமுக மாநிலங்களவை எம்பி சி.வி.சண்முகம் தான் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.
விழுப்புரம்: கடந்த மூன்று ஆண்டுகளாக சமூக வலைத்தளங்கள் மூலம் தனக்கு கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் கூறியிருந்தார்.
மேலும், இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில், இன்று (அக்.25) காலை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சி.வி.சண்முகம் வந்தார்.
ஆனால், அவர் வந்த நேரத்தில் அங்கு எஸ்பி இல்லை. இருப்பினும், அவருக்காக பார்வையாளர்கள் அறையில் அவர் காத்திருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் எஸ்பியைச் சந்திக்க முடியாமல் போனதால், சரியாக பிற்பகல் 12 மணியளவில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் நுழைவாயில் முன்பு திடீரென சி.வி.சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் சிறிது பரபரப்பு நிலவியது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிகவின் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் நான் கலந்துகொள்ளப் போவதாகவும், அதுகுறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ சேனலில் செய்தி வெளியானதாகவும் ஒரு தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. ஆனால், இது முழுக்க முழுக்க பொய்யான தகவல்.
திட்டமிட்டே எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பப்பட்ட பொய்ச் செய்தி அது. எனவே தான், இதற்கு சேனல் தரப்பிலும் மறுப்புச் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தேன்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து : “Technical Fault” என முட்டுக்கொடுப்பது ஏன்? வானதி சீனிவாசன் அதிரடி!
அது மட்டுமல்லாமல், கடந்த நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேரங்களிலும் இதுபோல எனக்கு எதிராக அவதூறு பரப்பினர். எனவே, இது தொடர்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை தொடர்ந்து 23 புகார்கள் அளித்துள்ளேன். ஆனால், எந்தப் புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
என் மீது இந்த அரசு வழக்குப் பதிவு செய்வதில் மட்டுமே காட்டும் முனைப்பை, நான் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் காட்டுவதில்லை. அதேநேரம், நான் எஸ்பியைச் சந்திக்க முன்கூட்டியே அனுமதி வாங்கி இருந்தாலும், அவர் திட்டமிட்டு என்னைச் சந்திக்காமல் தவிர்த்துள்ளார்” எனக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.