டிடிவி தினகரனுக்கு ஷாக் கொடுத்த சிவி சண்முகம் : ஸ்கெட்ச் போட்ட அதிமுக… மாறிய அமமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2022, 8:13 pm

டிடிவி தினகரன் அதிமுகவுக்குள் அல்லது பாஜக கூட்டணியில் வந்தால் அதிமுகவில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவார். இதன் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உணர்ந்துள்ளது. அவர் வந்தால் சசிகலா வருவார், சசிகலா வந்தால் ஓ.பன்னீர்செல்வம் வருவார். இதனால் அதிமுக தனது கையை விட்டு போய் விடுமோ என அஞ்சும் எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று இன்று சென்றிருக்கிறது. விழுப்புரம் அமமுக வடக்கு மாவட்ட கழக செயலாளரும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி மண்டல பொறுப்பாளருமான பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமானசி.வி சண்முகம் தலைமையில் திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

இதுவரையில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது ஆதரவாளர்கள் மாறி மாறி அணி தாவி வந்த நிலையில் திடீர் திருப்பமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பயணித்த டிடிவி தினகரனின் ஆதரவாளர்களை வளர்க்கும் முயற்சியில் எடப்பாடி தரப்பு ஈடுபட்டிருப்பது டிடிவி தினகரனை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தங்கள் மாவட்டங்களில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்களை தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சியில் எடப்பாடி தரப்பு ஈடுபட்டுள்ளதாகவும் இதற்காக பல முன்னாள் அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது சிவி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ள இருவரும் நாளை முறைப்படி எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைய இருக்கின்றனர். இந்த தகவலால் தினகரன் தரப்பு வட்டாரம் கடும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் வரும் நாட்களில் மேலும் பல மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி முகாமுக்கு காவலாம் என கூறப்படுகிறது. மேலும் அதிமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் மாவட்ட செயலாளர்கள் யார் யார் என்பது குறித்து கண்காணிக்கவும் டிடிவி தினகரன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 426

    0

    0