விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்தும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்ககோரி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மழை வெள்ளத்தை கடலூர், விழுப்புரம சந்தித்துள்ளதாகவும், புயல் கரையை கடலூர், மரக்காணத்திற்கு இடையே தான் கரையை கடக்கும் என வானிலை எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புயலே கால அவகாசம் கொடுத்து மெதுவாக நகர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தியது. புயலுக்கே செயல்படாத திமுக அரசு என்பது தெரிந்திருக்கிறது என கூறினார்.
புயல் கரையை கடந்த இடத்தில் முதலமச்சர் முகாமிட்டு மக்களை காப்பாற்றி இருக்கனும் ஆனால் அதனை செய்யவில்லை. பெஞ்சல் புயல் வரலாறு காணாத அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் 56 செ.மீ மழை கொட்டி தீர்த்தது.
மாவட்டமே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. ஆனால் சென்னையில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்ததாக முதலமைச்சர் தெரிவிக்கிறார்.
கிராம நிர்வாக அலுவலர்கள் அதிகாரிகள் மக்களை சந்திக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய வெள்ளம் சுனாமியை சந்தித்த அதிமுக அரசின் மீட்பு பணியை பாராட்டினார்கள்.
ஆனால் திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஷீட்டிங் நடத்தி கொண்டிருப்பதாகவும்,
எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து நிவாரணம் வழங்கிய பின்பு தூக்கத்திலிருந்து எழுந்து முதலமைச்சர் ஸ்டாலின் மறு நாள் விழுப்புரத்திற்கு வருகை புரிந்தவர் போட்டோ எடுத்துவிட்டு சென்றுவிட்டதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு அவரே பட்டம் சூட்டி கொள்வார் என தெரிவித்தார்.
இதையும் படியுங்க: காக்கிச் சட்டை போட்டுட்டு செய்ற வேலையா இது? போலீஸ் கான்ஸ்டிபிள் கைது!!
மக்களை சந்திக்க முடியாத நிலை திமுக அரசிற்கு உள்ளதாகவும் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், மக்களை சந்திக்க அச்சம் பயம் உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு முழுமையாக ஆராயிரம் வழங்கும் முதலமைச்சர் விழுப்புரத்திற்கு இரண்டாயிரம் வழங்குகிறார்.விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் விவசாயத்தை நம்பி இருக்கிற மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார் அவர்களுக்கு இரண்டாயிரம் மட்டுமே வழங்கப்படுவது ஒரு கண்ணுல வென்ணெய் ஒரு கண்னுல சுண்ணாம்பு வைத்து கிராம புற மக்கள் என்றால் என்ன எளக்காரணமா என்று கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தன் ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை அதிகாரிகளை மட்டுமே நம்பி ஆட்சி செய்வதாகவும் ஆட்சி மாற்றம் வரும் இன்றைக்கு திமுக இருக்கும் அதிமுக வரும் அதிகாரிகள் அவர்களின் பணியையும் கடமையும் செய்யவில்லை, நிர்வாக திறன் அற்ற பொறுப்பற்ற திட்டமிடாத அரசாக திமுக அரசு உள்ளது. சாத்தனூர் அணையில் திறக்கப்பட்ட நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பாதிப்பிற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களை திமுக அரசு ஏமாற்ற பார்ப்பவதாகவும், விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த ஒரே அரசாக திமுக அரசு உள்ளது. விவசாயிகள் மீது கைவைத்த அரசு பிழைத்ததாக சரித்தரம் இல்லை விவசாய் பெருமக்களை ஏமாற்றி கொண்டிருக்கிற அரசாக உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் வழங்க வேண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பத்தாயிரம் வழங்க வேண்டும் என கூறிய ஸ்டாலின் ஏன் இப்போது வழங்கவில்லை சென்னைக்கு வழங்கியது போல் ஆறாயிரம் வழங்க வேண்டும்.
கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்தால் பத்து லட்சம் கொடுக்கும் திமுக அரசு விவசாயிகள் வெள்ளத்தால் பாதித்து உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் வழங்குவதாக தெரிவித்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.