பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள்… இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் : காவல் ஆணையர் துவக்கினார்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2022, 10:08 pm

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரோட்டரி கிளப்ஸ் ஆஃப் கோயம்புத்தூர் ரீஜன் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை தொடங்கினர்.

இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பயணமானது 6 இருசக்கர வாகனங்களில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டு வில் முடிவடைகிறது.

இதற்காக 14 நாட்களில் 7000 கிமீ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய ரைடர்கள், தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக செயலி மூலம் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேபால் செல்வதாகும் செல்லும் வழியில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திச் செல்வதாக கூறினர்.

  • 500 crore collection news all are fake said by sundar c 500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்