ஓ இது தான் காரணமா..! கோவை to குருவாயூர் சைக்கிளில் சென்று தாலி கட்ட போகும் சைக்கிள் வீரர்..!
Author: Vignesh6 November 2022, 11:42 am
கோவை: ஆரோக்கியமான இந்தியா, பசுமை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை தொண்டாமுத்தூர், காளிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்பிரெட் லவ் பவுண்டேஷன் நிறுவனர் சிவசூர்யா (28) குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நாளை குருவாயூர் கோவிலில் கேரளாவை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். அதற்காக இன்று கோவையிலிருந்து குருவாயூர் வரை சைக்கிளில் சென்று தாலி கட்ட சைக்கிளில் சாலை மார்கமாக பயணம் செய்து உள்ளார்.
இவர் கூறுகையில், ஆரோக்கியமான இந்தியா, பசுமை இந்தியா என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் நான் குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் முதல் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வரை 10 நாட்களில் பல்வேறு மாநிலங்களை கடந்து 1902 கிமீ தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டது சாதனையாக உள்ளது.
நான் ஒரு சிறிய குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களை சந்தித்தவன். கடந்த 5 வருடங்களுக்கு முன் எனது தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்துக் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பசுமை இந்தியாவை உருவாக்கவும் வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.