பால் கேன் பழுது பார்க்கும் போது சிலிண்டர் வெடித்து விபத்து : ஷாக் சிசிடிவி.. 2 பேர் படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 July 2024, 7:20 pm

சேலம் நெய்க்காரப்பட்டி பகுதியில் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் கேன்கள் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது

இன்று ஈரோடு மாவட்டம் ஆதி ரெட்டியூர் பகுதியை சேர்ந்த குமார் 42 மற்றும் கோவை மாவட்டம் உதயம் பாளையம் பகுதியை சேர்ந்த கோபி 35 ஆகிய இரண்டு பேர் பழுதான பால் கேன்களுக்கு வெல்டிங் செய்வதற்காக நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தின் பழுதான பால் கேன்களை வெல்டிங் செய்வதற்காக வந்துள்ளனர்.

அப்போது பழுதான கண்களுக்கு வெல்டிங் செய்து கொண்டிருக்கும் போது காலை சுமார் 7 மணி அளவில் வெல்டிங் பயன்படுத்தும் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது அப்போது கோபி மற்றும் குமார் சிலிண்டர் வெடித்ததில் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.

சிலிண்டர் வெடிக்கும் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தாய்மடைந்த இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் சிலிண்டர் எதனால் வெடித்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!