மகள்களை நினைத்து வருத்தம்.. மறுமணம் செய்த இமான் உருக்கம்..!

Author: Rajesh
19 May 2022, 10:53 am

இசையமைப்பாளர் டி.இமான் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ததையடுத்து, சில தினங்களுக்கு முன்பு அமலி உபால்டு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது மறுமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த இமான், அதில் தனது மகள்கள் குறித்து உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது மனைவியின் குழந்தையான நேத்ராவின் தந்தையாக இருப்பது மகிழ்ச்சி என கூறிய அவர், இத்தருணத்தில் என் அன்பு மகள்கள் வெரோனிகா மற்றும் பிளெசிகாவை நான் தனிப்பட்ட முறையில் மிஸ் செய்கிறேன், ஒரு நாள் என் மகள்கள் தன்னைத் தேடி வருவார்கள் அப்பொழுது மனைவி அமலி மற்றும் மகள் நேத்ராவுடன் வரவேற்போம் என்று கூறியுள்ளார்.மேலும் நேத்ரா தனது மூன்றாவது மகள் என்றும் கூறியதோடு, இசை ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?