இசையமைப்பாளர் டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அவருக்கு வெரோனிகா, பிளெஸிகா என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே கடந்த வருடம் இமான் – மோனிகா இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து அமலி உபால்டு என்பவரை கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார் இமான். அதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து தனது மறுமணம் குறித்து முகநூலில் பதிவிட்ட டி.இமான், தனது இரண்டு மகள்களுக்காக காத்திருப்பதாக உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இமானின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அவரது முன்னாள் மனைவி மோனிகா, அதில் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “டியர் டி.இமான், உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் 12 வருடம் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம். அதற்காக வருத்தப்படுகிறேன்.
கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்த குழந்தைகளை நீங்கள் பார்க்கவும், கவனிக்கவும் இல்லை. தற்போது அவர்களுக்கும் மாற்று கண்டுப்பிடித்துவிட்டீர்களா? எது நடந்தாலும் என் குழந்தைகளை உங்கள் அப்பாவிடம் இருந்து நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் புது குழந்தையையும் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துகள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.