2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, இதுவரை நாங்கள் கூட்டணி தொடர்பாக விஜய் உள்ளிட்ட எந்தக் கட்சிகள் உடனும் பேசவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், நேற்று (நவ.18) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், அதிமுக உடன் கூட்டணி இல்லை என்பதை தமிழக வெற்றிக் கழகம் தெளிவுபடுத்தி உள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவாக ஒரு கருத்தைச் சொல்லி உள்ளார். பாஜக அல்லாத ஒருமித்த கருத்துள்ள கட்சிகள், அதாவது திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் மட்டுமே அதிமுக கூட்டணிக்கு வரலாம்.
எனினும், தேர்தல் அறிவித்த பிறகு தான் கூட்டணி பற்றி பேசப்படும். எந்த கட்சி, அதிமுக தலைமையிலான கூட்டணியை ஏற்றுக் கொள்கிறதோ, அவர்கள் எங்களிடம் வரலாம். 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, இதுவரை நாங்கள் கூட்டணி தொடர்பாக விஜய் உள்ளிட்ட எந்தக் கட்சிகள் உடனும் பேசவில்லை“ எனக் கூறினார்.
மேலும் பேசிய ஜெயக்குமார், “2021 சட்டமன்றத் தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அரசு ஊழியர்களுக்கு துரோகம் மட்டுமே செய்து வருகிறது. 42 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி உள்ளார்.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
அதேநேரம், அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சாதனைகளை பொதுவெளியில் விவாதம் செய்யத் தயார். ஆனால், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று கேட்டதற்கு, இதுவரை வாய் திறக்காத ஸ்டாலின், தனது மகன் உதயநிதியை உசுப்பிவிட்டு வாய் நீளம் காட்டியிருக்கிறார்” எனத் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக, “அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது” என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
This website uses cookies.