உதயநிதி செல்லக்குழந்தை.. ஸ்டாலின் பிள்ளை.. ஜெயக்குமார் வைத்த ட்விஸ்ட்!

Author: Hariharasudhan
18 December 2024, 5:59 pm

யார் காலிலும் விழவேண்டிய அவசியம் அதிமுகவுக்கு கிடையாது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

சென்னை: வருகிற டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்த உள்ள நிலையில், அதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பொதுவாகவே கூட்டணி குறித்து பாஜக அல்லாத கட்சிகள், அது எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் என்பதை பொதுச் செயலாளர், கட்சி நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். பாஜகவைப் பொறுத்தவரை, பொதுச் செயலாளர் தெளிவுபடுத்தி உள்ளார்.

நேற்றும் இல்லை, இன்றும் இல்லை, நாளையும் இல்லை, 2026 தேர்தலில் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதை பலமுறை கட்சியின் எண்ணமாக பொதுச் செயலாளர் கூறியுள்ளார். மேலும், டிடிவி தினகரனைப் பொறுத்தவரை, தன்மானத்தை விட்டு எந்த அளவிற்கும் பல வழக்குகள் போடப்பட்டு, அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற வகையில் பாஜகவிடம் சரணடைந்துள்ளார்.

பாஜகவிடம் சரணடைந்த ஒருவர், பாஜகவிடம் கூட்டணிக்கு வாருங்கள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. அதிமுகவைப் பொறுத்தவரை தன்மானத்தோடு இயங்கக்கூடிய ஒரு இயக்கம். எனவே யார் காலிலும் விழவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.

D jayakumar on TTV Dhinakaran called AIADMK for BJP Alliance

பொதுச் செயலாளரைப் பொறுத்தவரை இந்த நிலைப்பஏ தொடரும். திமுகவைப் பொறுத்தவரை இரட்டை நாக்கு. நேற்றொரு கொள்கையின்றி ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கை, பதவி சுகத்திற்காக யார் வேண்டுமானாலும் விடுவார்கள். யார் காலை வேண்டுமானாலும் வாருவார்கள். அதிமுகவைப் பொறுத்தவரை அந்த நிலை என்றைக்குமே இருந்தது கிடையாது.

ஸ்டாலினின் அப்பா முதலமைச்சராக இருந்த போது, சர்க்காரியா கமிஷனைக் கண்டு பயந்தது யார்? அன்றைக்கு பயந்து காவிரி உரிமை பிரச்னையில் காவிரி உரிமையை விட்டுக் கொடுத்தார். பச்சைக் கொடி காட்டி கச்சத்தீவை தாரை வார்த்தவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்னை மத்திய அரசுக்கு பயந்து உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிவிட்டு வந்தார்.

இதையும் படிங்க: உயர்மின் கோபுரத்தில் பணி செய்த போது எதிர்பாரா விபத்து : உடல் கருகி பலியான ஷாக் காட்சி!

தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்து விட்டு, மகனுக்கு முடிசூட்டி விட்டோம் என்ற ஆனந்தத்தில் தான் ஸ்டாலின் இருக்கிறார். தமிழ்நாடு எக்கேடு கெட்டுப் போனாலும் அவருக்கு கவலை இல்லை. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் திமுக அரசிற்கு மிகப்பெரிய குட்டை வைத்துள்ளது.

சிபிஐக்கு பயந்து மேல்முறையீடுக்குச் சென்று இருக்கிறார்கள். உச்சநீதிமன்றமே பயத்திற்கு சொந்தக்காரர்கள் யார் என்பதை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் செல்லக் குழந்தை உதயநிதி, நல்ல பிள்ளை ஸ்டாலின்” எனக் கூறியுள்ளார்.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்