’குருமூர்த்தி வாங்கிக் கட்டிக்கொள்வார்’.. பாஜகவுடன் அதிமுக கூட்டணி? சூடான ஜெயக்குமார்!

Author: Hariharasudhan
17 January 2025, 3:12 pm

வாயை அடக்கிக் கொண்டு குருமூர்த்தி, அவரின் வேலையை மட்டும் பார்த்தால் போதும் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 108வது பிறந்தநாள் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, கேக் வெட்டினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “துக்ளக் குருமூர்த்தி ஏற்கனவே எங்களிடம் நிறைய வாங்கிக் கட்டிக்கிட்டார். மீண்டும் மீண்டும் வாங்கிக் கட்டிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக வேண்டாம் என்று தான் தவிர்த்து வருகிறோம்.

அதனால் வாயை அடக்கிக் கொண்டு, குருமூர்த்தி அவரின் வேலையை மட்டும் பார்த்தால் போதும். 2026ஆம் ஆண்டில் அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என்ற முடிவு கட்சியால் எடுக்கப்பட்டு விட்டது. வரும் காலத்தில் பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு கட்சி வந்துவிட்ட பிறகு, மீண்டும் குருமூர்த்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. எனவே, அவர் வாயை மூடிக் கொண்டு இருப்பது நல்லது” என்றார்.

D jayakumar about Gurumoorthy Thugluck

முன்னதாக, சமீபத்தில் துக்ளக் இதழின் 55வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, “ஊழலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால், அதிமுக தேச விரோதக் கட்சி அல்ல. வருகின்ற தேர்தலில் பாஜகவு,ம் அதிமுகவும் இணைய வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: அது எனக்கு கெளரவம்.. பாலையா சர்ச்சை நடனம் குறித்து ஊர்வசி ரவுத்தெலா விளக்கம்!

ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு அரசியல் தலைவருக்கானப் போக்கு இல்லை. ஏற்கனவே ஒருமுறை கையில் கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிட்டு விட்டார். கடந்த தேர்தலில் கொஞ்சம் சமரசம் செய்து கொண்டு, பாஜகவுக்கு 10 அல்லது 12 சீட்டுகளைக் கொடுத்திருந்தால், திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்திருக்காது.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியஇருவரிடமும் இருந்த உறுதி, எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை” என விமர்சித்திருந்தார். மேலும், 2021 சட்டமன்றத் தேர்தல் வரை பாஜக உடன் கூட்டணியில் இருந்த அதிமுக, 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணியை முறித்துக் கொண்டு, இனி பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!
  • Leave a Reply