11 மாவட்டங்களில் மட்டுமே பதிவான தினசரி பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2022, 7:53 pm

சென்னை : தமிழகத்தில் இன்று மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு இல்லாதது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 3வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 647 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 63 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு பதிவாகவில்லை. தலைநகர் சென்னையில் 12 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்