தினமும் கடத்தப்படும் அரிசி, பருப்பு, பாமாயில்… மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2023, 11:55 am

தமிழகத்தில் குடிமைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருகிறது இதனால் மக்கள் கண்ணீர் வடித்து வேதனையில் உள்ளனர்.

கடந்த ஜனவரி, பிப்ரவரி 2 மாதத்தில் சிவில் சப்ளை சிஐடி பிரிவில் உள்ள அதிகாரிகள் 35 லட்சம் மதிப்பில் உள்ள 1.7 லட்சம் கிலோ அரிசி, பாமாயில், பருப்பு ஆகியவற்றை சோதனை நடத்தி பறிமுதல் செய்துள்ளனர்.

அதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் 1.06 கோடி மதிப்பில் உள்ள அரிசி பாமாயில் ,பருப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

தினந்தோறும் குடிமை பொருட்கள் கடத்தாத நாட்களே இல்லை இதன் குடிமை பொருட்கள் தடுப்பதில் 100 சகவீதம் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது.

புரட்சித்தலைவி அம்மா ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் மாதம்தோறும் 20 கிலோ அரிசி திட்டத்தை கொண்டு வந்தார்கள். இந்த கடத்தல் மூலம் இந்த திட்டம் மக்களுக்கு பயள் அளிக்கவில்லை தற்போது குடிமை பொருள் கடத்தல் தொடர்ந்து நீடித்தால் மக்களே வீதிக்கு வந்து போராடும் நிலை உருவாகும் என கூறினார்.

….

இன்னும் 10 கிரிமினல் வழக்கு ராகுல் மேல இருக்கு… 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது : நீதிமன்றம் உத்தரவு!!

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார்.

அதை எதிர்த்து சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு, தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதையடுத்து குஜராத் ஐகோர்ட்டை ராகுல் காந்தி நாடினார்.

கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைகால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் குஜராத் ஐகோர்ட்டு நேற்று வெளியிட்ட வழக்கு அட்டவணையின்படி, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில்,ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது எனவும் . ராகுல்காந்தி மீது குறைந்தது 10 கிரிமனல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குஜராத் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 244

    0

    0