கோவையில் தலித் நபர் அடித்து கொலை: உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!!

Author: Rajesh
11 February 2022, 1:00 pm

கோவை: சுல்தான் பேட்டையை அடுத்த பணப்பட்டி பொன்னாங்காணி பகுதியில் தலித் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகேட்டு முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை பொன்னாங்காணி என்ற பகுதியில் ராமு என்ற தாழ்த்தப்பட்ட நபர் மீது 20க்கும் மேற்பட்ட ஆதிக்க ஜாதியினர், கடந்த 7ஆம் தேதி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், படுகாயமடைந்த ராமு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து அவருக்கு அளிக்கக் பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது ஜாதிய வன்மத்தை விதைப்பதாக கூறி முற்போக்கு அமைப்பினர் ஒன்றுகூடி, சாதிவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் 20 பேரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று தாழ்த்தபட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் இணைந்து இன்று அரசு மருத்துவமனை முன்பாக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கங்களை சார்ந்தவர்கள், இறந்தவரின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி