ரயில்வே நிர்வாகத்தின் அறைகுறை பணியால் ஆபத்து : ரயில்வே கிராஸில் தரமற்ற பணி.. விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2022, 1:31 pm

கோவை : காரமடையில் ரயில்வே நிர்வாகத்தின் அறைகுறை வேலையால் சாலையில் விழுந்த வாகன ஓட்டிகள் பல பேர் தவறி விழும் சம்பவம் அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் காரமடையில் கடந்த ஒரு வாரமாக ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அதன் ஒரு பகுதியாக ரயில்வே இருப்பு பாதைகளில் உள்ள தன்டவாளங்கள் மாற்றி அமைக்க காரமடை தோலம்பாளையம் ரயில்வே
கேட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

பராமரிப்பு பணி நடைப்பெற்ற இந்த ரயில்வே கேட்டினை கடந்து சென்றால் தான் மருதூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தேக்கம் பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல முடியும் என்பதால் இந்த பாதை எப்போதும் அதிக அளவிலான வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் ரயில்வே கேட்டில் தண்டாவளத்தின் அடிப்பகுதியில் வாகனங்கள் சிரமம் இன்றி செல்ல வசதியாக கற்கள் பதிக்கும் பணியும் நடைபெற்றது. இருப்பினும் அப்பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் அரையும் குறையுமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நேற்று இரவு காரமடை தோலம்பாளையம் ரயில்வே கேட்டினை கடந்து செல்ல முயன்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர்.

குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனங்கள் கடந்து செல்ல சரியான முறையில் கற்களை பதிக்காமல் அரையும் குறையுமாக பணிகள் நடந்ததால் 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பாதையை கடக்க முயன்று விபத்தில் சிக்கிர்.

நான்கு சக்கர வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. எனவே பராமரிப்பு பணிகளை முறையாக செய்து விபத்துகளை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ