10 ஏக்கர் நிலத்துக்கு ஆபத்து.. மாவட்ட ஆட்சியருக்கு பகீர் கிளப்பிய பிரபல நடிகர் : ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு மனு!!
Author: Udayachandran RadhaKrishnan4 April 2022, 5:50 pm
காஞ்சிபுரம் : ரூ.5 கோடி நஷ்ட்ஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. வார வாரம் திங்கட்கிழமை மக்கள் மனு அளித்து வருவதால் இன்று ஏராளமானோர் ஆட்சியரிடம் மனு அளிக்க காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ஸ்ரீபெரும்புதூர் வடமங்கலம் கிராமத்தில் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலம் உள்ளது.
அந்த நிலத்திற்கு முறையாக வரி கட்டி வருகிறேன், எனது நிலத்தை ஒட்டி கிரஷர், கல்குவாரி நடத்துபவர்கள் கடந்த 27 வருடங்களாக என் நிலத்தில் கழிவுகளை கொட்டி பாலாக்கிவிட்டனர்.
அந்த நிலத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. கழிவுகள் கொட்டி சீரழித்ததால் ரூ.5 கோடியும், அந்த மாசுகளை அகற்ற ரூ.2 கோடி என மொத்தம் ரூ.7 கோடி பெற்றுத் தர வேண்டும் என்றும், விவசாய பகுதியில் செயல்படும் கல்குவாரியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் இந்த பகுதியில் குடிநீர் தரும் ஏரியையும் கழிவுநீரை பாய்ச்சி மாசுபடுத்தயுள்ளதால் சுற்றுச்சூழலும் மாசடைந்துள்ளது. மேலும் இது குறித்து புகார் அளிக்க தங்களுக்கு பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் தாங்கள் பதிலளிக்கவில்லை என ஆட்சியரிடம் வருத்தத்துடன் கூறினார்.