மாநில சுயாட்சிகளுக்கு ஆபத்து.. ஒற்றை ஆட்சி நடத்த பாஜக முயற்சி : அமைச்சர் பொன்முடி பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2023, 4:30 pm

மாநில சுயாட்சிகளுக்கு ஆபத்து.. ஒற்றை ஆட்சி நடத்த பாஜக முயற்சி : அமைச்சர் பொன்முடி பரபரப்பு குற்றச்சாட்டு!!

விழுப்புரம் காந்தி சிலை அருகிலுள்ள திமுக கட்சி அலுவலகத்தில் நீட் விலக்கு கோரி கையெழுத்து இயத்தினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி திமுக எம் எல் ஏ புகழேந்தி கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி
சட்டமன்றத்தில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றி கோப்புகள் அனுப்பினால் அதில் கையெழுத்திடாமல் ஆளுநர் செயல்படுவதாகவும் இதுவரை 19 கோப்புகளில் கையெழுத்திட இல்லாமல் கிடப்பில் வைத்துள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசின் முக்கியமான கோப்புகளில் கூட ஆளுநர் ரவி கையெழுத்திடாமல் அரசின் உரிமைகளை மதிப்பதில்லை என்றும் அரசு மட்டுமல்லாமல் பல்கலைக்கழக உரிமைகளையும் அவர் மதிப்பதில்லை என கூறினார்.

பல்கலைக்கழகங்களில் உள்ள சிண்டிகேட், செனட் ஆகியவைகளில் உறுப்பினராக உள்ள பேராசிரியர்கள் துணை வேந்தராக இவரை தான் நியமிக்க வேண்டும் என்று கூறும் தீர்மானத்தை ஆளுநர் மதிப்பதில்லை என்றும் தமிழக ஆளுநர் ஆளுநராக செயல்படாமல் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

மதுரை பல்கலைக்கழகத்தில் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பியும் அவர் அதற்கான நடவடிக்கை எடுக்காததால் 2 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறும் போது சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு வழங்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் எல்லாவற்றிற்கும் ஆளுநர் தடையாக இருப்பதாகவும், கூட்டாட்சி நாட்டினை ஒற்றையாட்சி நாடாக மாற்ற பாஜக முயன்று வருவதாகவும், ஒரு நாடு ஒரே அரசு என்று செயல்பட்டு வருவதாக கூறினார்.

மத்திய பாஜக ஆட்சியில் மாநில அரசுகளின் உரிமை பரிக்கப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை பாஜகவின் தலைமை அலுவலகமாக மாறியுள்ளதாகவும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை மாற்றியமைத்து ஒற்றை ஆட்சி அமைக்க மத்திய பாஜக அரசு முற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஆளுநர் தான் கிளப்பி கொண்டிருப்பதாகவும் அவரே சட்ட ஒழுங்கு பிரச்சனையை கிளப்பிவிட்டு பாஜகவை சார்ந்தவர்களை வைத்து செய்துவிட்டு தமிழக அரசின் மீது குற்றஞ்சாட்டும் அளவிற்கு அவர் போய் இருக்கிறார் என்றால் இது கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாநில உரிமைகளுக்கே விடுக்கின்ற சவால் என்பதால் அதனை முன் வைத்து தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 389

    0

    0