போதை ஏறிப் போச்சு… புத்தி மாறிப் போச்சு : மதுபோதையில் பைக்கில் ஆபத்தான சாகசம்.. போதை ஆசாமியின் ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 1:21 pm

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் பைக்கின் பின்னால் தனது இரண்டு கால்களையும் தூக்கி சீட்டில் வைத்து சாகச பயணத்தில் சாலையில் சென்ற நபரால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

இந்த சாகச பயணத்தை அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது

கமுதி முதுகுளத்தூர் கடலாடி சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி பைக் ஆட்டோ பஸ் சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்லும் நிலை தொடர்கிறது.

இவற்றைக் வட்டார போக்குவரத்து அலுவலர் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ