மீண்டும் பேருந்து படியில் ஆபத்தான பயணம்… விதிகளை மீறும் மினி பேருந்துகள் : நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 10:31 am

மீண்டும் பேருந்து படியில் அபாயமான பயணம்… விதிகளை மீறும் மினி பேருந்துகள் : நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?!!

திருப்பூர் பின்னலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாகும் இங்கு பல்வேறு மாநிலத்தவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் என சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் காலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பேருந்துகளில் சென்று வருகின்றனர். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்துகள் தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை, மற்றும் காங்கேயம் சாலை ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மினி பேருந்துகளில் அரசு அனுமதித்துள்ள எண்ணிக்கையை காட்டிலும் அதிகப்படியான பயணிகளை மினி பேருந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் தங்களுக்கு வசூல் மட்டும் ஆனால் போதும் என்பதை மட்டும் பார்த்துக் கொண்டு அதிகப்படியான பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

இந்நிலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் படியில் பயணம் சென்றால் நொடியில் மரணம் என்பதை கூட உணராமல் பேருந்து படிகளில் தொங்கியபடி உயிரையும் துச்சமனை மதித்து செல்கின்றனர் மேலும் மினி பேருந்துகள் குறுகிய பாதைகளின் வழியாக செல்லும் பொழுது விபத்துகள் ஏற்படும் பொழுது பேருந்தில் பயணம் செய்யக்கூடியவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்கும் பொழுது எழுத்துப்பூர்வமான புகார்கள் வந்தால் மட்டுமே தாங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் ஆபத்தையும் கூட உணராமல் படியில் தொங்கியபடி ஆட்டம் பாட்டத்துடன் சென்று வருகின்றனர்.

அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிகப்படியான பயணிகளை ஏற்றி செல்லும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பெரும் விபத்துகளில் இருந்து மாணவர்களையும் பயணிகளையும் பாதுகாக்க முடியும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 474

    0

    0