ஆபத்தான முறையில் பைக் சாகசம்.. இன்ஸ்டா ரீல்ஸ்க்காக பயமுறுத்திய சிறுவர்கள் ; தட்டித்தூக்கிய போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2024, 1:04 pm

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நாகர்கோவில் பிரதான சாலை மற்றும் கடற்கரை சாலைகளில் சிறார்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவதோடு அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வந்தனர் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெறும் சிறாரை அந்த வார தலையாக கருதி ஞாயிற்றுகிழமை ஏதாவது ஒரு இடத்தில் அழைத்து ஒன்றுகூடி அவரை சிறப்பித்து மீண்டும் பைக் சாகசத்தில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து அந்த சிறார்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டார்

இதனையடுத்து நேற்று குளச்சல் போக்குவரத்து பிரிவு போலீசார் திங்கள்நகர் குளச்சல் நாகர்கோவில் பிரதான சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு வீடியோ பதிவு செய்த 12-சிறார்களை பிடித்து அவர்களிடம் இருந்த 7-பைக்குகளை பறிமுதல் செய்ததோடு அவர்களின் பெற்றோர்களை அழைத்து தலா 11-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்து இன்ஸ்டா ரீல்ஸ் பதிவுகளையும் பெற்றோர்கள் முன்னிலையில் அழித்து நடவடிக்கை எடுத்தனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu