ஆடி மாதம் ஒண்ணும் பீடை மாதம் இல்லை…. சமயபுரம் கோவிலில் தரிசனம் செய்த அர்ஜூன் சம்பத் ஆவேசம்!
Author: Udayachandran RadhaKrishnan17 July 2023, 2:35 pm
சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் நாள் மற்றும் அமாவாசையான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாரியம்மனை தரிசனம் செய்தார்.
பின்னர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்த அவர், சனாதன இந்து தர்மம் செழித்திடவும், இந்து மக்கள் கட்சி சார்பில் மீண்டும் மோடி வேண்டும் மோடி பிரார்த்தனை செய்து வந்துள்ளோம்.
வரும் 23ஆம் தேதி பொது சிவில் சட்டம் வேண்டும் என்பதற்காக மக்கள் கருத்து உருவாக வேண்டும். பழனியிலே பாரதமாதா பக்தர்கள் மாநாடு இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக இன்று சிறப்பு பிரார்த்தனை செய்தோம் என்றும், ஆடி மாதம் அம்மன் திருக்கோயிலில் கூட்டம் அலைமோதும் ரம்ஜானுக்கு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு 4000 மெட்ரிக் டன் அரிசி கொடுக்கிறார்கள்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 5000 மெட்ரிக் டன் அரிசி அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலே கூழ்வார்க்கும் நிகழ்ச்சி கொடுக்க வேண்டும் இந்து அறநிலைத்துறையை நடத்த வேண்டும். அதற்கான உணவு தானியங்களை அரசாங்கம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் பக்தர்களுக்கு உரிய வசதி இல்லாத காரணத்தினால் பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். கோவில் நிர்வாகம் உரிய வசதியை செய்து கொடுக்க வேண்டும். ஆடி மாதம் பீடை மாதம் கிடையாது பீடுடை மாதம், ஆடி மாதம் ஆன்மீக மாதம் என்றும், தமிழகத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு ஆடி மாதம் முழுவதும் அலை அலையாக பக்தர்கள் வருவார்கள் அவர்களுக்கு அரசாங்கம் உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
0
0